பேராவூரணி மிதமான மழை பெய்து வரும் நிலையில் பணத்திற்காக, வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் முன்பு காத்திருக்கும் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பேராவூரணியில்உள்ள பாதிக்கும் மேற்பட்ட ஏடிஎம்-கள் திறந்திருந்தாலும் அவற்றில் போதுமான பணம் இல்லை. இதனால் மக்கள் பணம் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையும் ஏடிஎம்-கள் முன்பு பணம் எடுக்க காத்திருந்த மக்கள் திடீரென பெய்த கனமழையால் சிறிது சிரமப்பட்டனர். இருப்பினும் கடந்த சில தினங்களாக பெய்யாமல் இருந்த மழை தற்போது திடீரென பெய்ததால் சற்று மகிழ்ச்சியும் அடைந்தனர்.