மார்ச் 2ல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.
12ம் வகுப்பு தேர்வு தேதி
மார்ச் 2 முதல் தாள்
மார்ச் 3 இரண்டாம் தாள்
மார்ச் 6 ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 7 ஆங்கிலம் இரண்டாம்தாள்
மார்ச் 10 வணிகம் / குடும்ப அறிவியல்/ புவியியல்
மார்ச் 13 வேதியியல் / கணக்கு பதிவியல்
மார்ச் 17 இந்திய கலாச்சாரம்/ கணினி அறிவியல் / உயிரி வேதியியல்/ சிறப்பு தமிழ் / சிறப்பு ஆங்கிலம்
மார்ச் 21 இயற்பியல் / பொருளியல்
மார்ச் 24 அரசியல் அறிவியல்/ நர்சிங்/ புள்ளியியல்
மார்ச் 27 கணிதம்/ விலங்கியல் / நுண் உயிரியல் ஊட்டசத்து / உணவியல்
மார்ச் 31 உயிரியல் / வணிக கணிதம் / வரலாறு / தாவரவியல்
10ம் வகுப்பு தேர்வு தேதி
மார்ச் 8 தமிழ் முதல்தாள்
மார்ச் 9 தமிழ் இரண்டாம்தாள்
மார்ச் 14 ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 16 ஆங்கிலம் இரண்டாம்தாள்
மார்ச் 20 கணிதம்
மார்ச் 23 அறிவியல்
மார்ச் 28 சமூகஅறிவியல்