கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் நாளை (1–ந்தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி இரவு திடீரென அறிவித்தது. மேலும் ஏ.டி.எம்.மில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.