10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்ததையடுத்து, தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பத்து ரூபாய் நாணயங்கள் கூட செல்லாது என வதந்தி பரவியது.
அதாவது இருவகையான 10 ரூபாய் நாணயங்கள் இருகின்றது அதில் எது கள்ள நாணயம் என புரியாமல் மக்கள் ,அதனை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த எந்த வதந்தியையும் யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது