பேராவூரணி தொகுதியில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 194 வாக்காளர்கள்.

Unknown
0

தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை. ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிட்டு அவர் பேசியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2016, நவ. 2-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 18 லட்சத்து 95 ஆயிரத்து 158 பேர் இருந்தனர். 2016, செப். 1 முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. தகுதி அடிப்படையில் ஆண்கள் 18,647 பேரும், பெண்கள் 22,016 பேரும் என மொத்தம் 40,663 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும், உரிய விசாரணை, ஆவணங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலிலிருந்து 310 ஆண்கள், 405 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 716 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் மாவட்டத்தில் 19 லட்சத்து 35 ஆயிரத்து 105 பேர் உள்ளனர். இது, மாவட்ட மொத்த மக்கள் தொகையில் 76.4 சதவிகிதம். இவர்களில் ஆண்கள் 9 லட்சத்து 50 ஆயிரத்து 458, பெண்கள் 9 லட்சத்து 84 ஆயிரத்து 593, மூன்றாம் பாலினத்தவர்கள் 54.
திருவிடைமருதூர் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 936 வாக்காளர்களும், கும்பகோணம் தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 297 வாக்காளர்களும், பாபநாசம் தொகுதியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 8 வாக்காளர்களும், திருவையாறு தொகுதியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 266 வாக்காளர்களும், தஞ்சாவூர் தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்களும், ஒரத்தநாடு தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 580 வாக்காளர்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 308 வாக்காளர்களும், பேராவூரணி தொகுதியில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 194 வாக்காளர்களும் உள்ளனர். திருவிடைமருதூர் தொகுதியைத் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்.
அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் மற்றும் வட்ட அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்களிலும் இப்பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும். மேலும், ஜன. 26-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் இப்பட்டியல் பார்வைக்காக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சி. சுரேஷ், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top