ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 12 லட்சத்துக்கும் அதிகமானோர் அணி திரண்டு போராட்டம் நடத்தியதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்தது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உடனடியாக வாடிவாசலை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி ஆயிரம் மாணவர்கள், இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டம் 18-ம் தேதி 50 ஆயிரம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய எழுச்சிப் போராட்டமாக மாறியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. நேற்று 5 லட்சத்துக்கும் அதிகமானோர் மெரினா கடற்கரையில் திரண்டனர். சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான இடங்களில் பொதுமக்களும், இளைஞர்களும் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன.
கோவை, திருப்பூர், நீலகிரி
கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பின்னலாடை நிறுவனத் தொழிலா ளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி
சேலத்தில் சிறை பிடிக்கப்பட் டுள்ள ரயில் மீது அமர்ந்து 500-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் 2 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கி நகரம் ஸ்தம்பித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் இருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா வாழ் தமிழர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓசூர் வந்து மக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர், திருவண்ணாமலை
வேலூர் பழைய பேருந்து நிலை யத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 73 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
நெல்லை, தூத்துக்குடி
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், இளைஞர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் எஸ்.ஏ.வி. மைதானத்தில் நேற்று 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர், இளைஞர்கள் 4-வது நாளாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுக்க 36 இடங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன.
நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டரங்கம் முன் நேற்று 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளை ஞர்களும், மாணவ, மாணவிகளும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
மதுரை
பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் கடந்த 16-ம் தேதி வாடிவாசலில் காளைகளை திறந்துவிட மறுத்தால் அலங்கா நல்லூரியில் தொடக்கப்புள்ளியாக தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு இன்று தமிழகமே குரல் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் நேற்று 5-வது நாளாக தொடர்ந்து 120 மணி நேரமாக வாடிவாசல் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை, அலங்காநல்லூரில் நடந்த போராட்டங்களில் நேற்று பல்லாயிரம் பேர் திரண்டனர். மதுரை தமுக்கம் எதிரில் குவிந்த இளைஞர்கள், மாணவர்களால்