பேராவூரணி நாட்டாணிக்கோட்டை அங்காடியில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் விழா, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. பேராவூரணி வட்டாட்சியர் தங்க பிரபாகரன் வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி, அரசின் நலத்திட்டங்கள் குறித்து உரையாற்றினார். நிறைவாக அங்காடி விற்பனையாளர் சி.ராமையன் நன்றி கூறினார்.
நன்றி : தீக்கதிர்