பேராவூரணி காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை யொட்டி விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி நீலகண்ட பிள்ளையார்கோவிலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பூக்கொல்லை வரை சென்று அண்ணாசிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் இருக்கை பட்டையும் அணிய வேண்டும். சாலை விதிகளைப் பின்பற்ற வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணியில் காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன், திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் சரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : தினமணி