பொங்கலும் மண்பானையும்.

Unknown
0


? பொங்கல் அன்று காலையில் வழக்கமான நாட்களைப் போல் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, 'பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி"களுக்காக டி.வி.யை ஆன் செய்து வைத்து விட்டு, அந்த நிகழ்ச்சிகளை பார்த்தவாறே, குக்கரில் பச்சரி, வெல்லம் போட்டு ஒரு 'விசில்" வந்ததும் பொங்கல் ரெடியாகி விடுகிறது. இதில் எந்தவித ஆட்டம் பாட்டமோ, கொண்டாட்டமோ இருப்பதில்லை.

? அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவருமே டி.வி. முன் அமர்ந்து 'பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி"யையும், 'இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறை"யாக நிகழ்ச்சியையும் பார்த்தவாறு, பொங்கலையும், கரும்பையும் சாப்பிடுவார்கள். இதனால் கரும்பு, சர்க்கரை பொங்கலில் உள்ள தித்திப்பு அவர்களுக்கு தெரிவதில்லை. தங்கள் வீட்டிற்குள்ளேயே பொங்கல் பண்டிகையை முடித்து கொள்கின்றனர்.

? இரண்டு நாட்கள் இப்படி கழிய, மூன்றாம் நாளான காணும் பொங்கல் அன்று கார் அல்லது ஆட்டோவில் நேராக பீச், பூங்கா என போய் உட்கார்ந்து, எதையாவது வாங்கி தின்று விட்டு மீண்டும் வீடு வந்து படுத்து உறங்கி விடுகிறோம். இந்த நிகழ்ச்சிகளில் ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் கூட ஒன்றாக கலந்து கொள்வதில்லை. ஒருவர் பீச்-க்கு போனால், ஒருவர் தியேட்டருக்கும், இன்னொருவர் பூங்காவுக்கும் செல்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கூட அனைவரும் ஒன்று சேராமல் கொண்டாடப்படும் விழாக்களில் எப்படி சந்தோஷம் களை கட்டும்.

? வழக்கமான நாட்களைப்போலவே, இன்றைய பொங்கல் திருநாளும் கழிந்து விடுகிறது. வழக்கமான நாட்களுக்கும், பொங்கல் திருநாளும் உள்ள வித்தியாசம் என்ன என்றால், பொங்கல் அன்று புத்தாடை அணிவதும், வேலைக்கு செல்லாமல், 'பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சி"களை பார்ப்பதுமே. இன்று கொண்டாடப்படும் குக்கர் பொங்கல், நாளை ஆன் லைன் பொங்கலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

? குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும் உண்டாகும் மனஅழுத்தம், சோர்வு போன்றவற்றை போக்குவதற்காகவே பண்டிகைகள் பல கொண்டாடப்படுகிறது. ஆனால், பண்டிகை நாட்களையும் வழக்கமான நாட்களை போலவே கழித்தால் அதனால், நமக்கு பயன் என்ன?

நாம் மறந்தது மண்பானை பொங்கல் மட்டுமின்றி, கோடி சந்தோஷத்தையும் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது வாழ்வதுக்கு மட்டுமில்லாது, கொண்டாட்டத்தையும், ஊர் கூடி கொண்டாடும்போது கோடி சுகம் உண்டாகும் என்பது உண்மையே.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top