பேராவூரணி அருகே இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம். பொதுமக்கள் அச்சம்
எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்த கட்டிடம்.பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 6வது வார்டு நாட்டாணிக்கோட்டை உள்ளது. இந்த ஊரில் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தம் ஒன்று கடந்த 2000, 2001, ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பேராவூரணியிலிருந்து நாகுடி ஆவுடையார்கோவில் மற்றும் ரெட்டவயல், கட்டுமாவடி, மீமிசல், தொண்டி, இராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு இது மட்டுமின்றி அரசு கல்லூரியும் இந்த பகுதியில் இருப்பதால் இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகில் நடப்பட்டுள்ள கிலோ மீட்டரை காட்டும் கல் தெரியாத வகையில் இப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி மறைத்து விட்டனர். இதனால் உடனடியாக இது சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களான இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.நன்றி:ILAYARAJA KEERAVANI