தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். னவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால், வங்கி அலுவலகங்கள் மூலம் அல்லது இணையதளம் வழியாகவும் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.