நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாள ர்களுக்கு கடந்த 5 மாத கால சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைத்திட வேண்டும். நெடுவாசல் மற்றும் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேராவூரணி ஒன்றியக்குழு சார்பில் ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய ச்செயலாளர் எம்.எஸ். கருப்பையா தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச்செயலாளர் எஸ்.தமிழ்செல்வி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி ஆதரித்துப் பேசினார். போராட்டத்தில் 60 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அரசுமணியை சந்தித்து தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் "இதுவரை வழங்கப்படாமல் உள்ள 5 மாத கால கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலை செய்தவர்களுக்கு அந்தந்த ஊராட்சிகளிலேயே பணம் வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நன்றி : தீக்கதிர்