பேராவூரணி தற்போது நிலவும் வறட்சியான சூழல் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் உளுந்து, கடலை பயிர்களை காப்பாற்றிட தெளிப்பு நீர் பாசனம் மிகச் சிறந்த முறையாகும். இதை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் சார்பில் டான்வோடா திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 27 நபர்களுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தலைமை வகித்தார். இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசன கருவிகளை வழங்கினார்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்