பேராவூரணியை அடுத்த ஒட்டங்காட்டில் அரசு மதுபானக்கடை உள்ளது. பட்டுக்கோட்டை மெ யின் சாலையில் உள்ள இக்கடை க்கு வரும் குடிமகன்களால் இப்பகுதி பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு ள்ளது. எனவே இந்த மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் திங்க ட்கிழமையன்று மாலை இப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் இவ்வழியே சென்றபோது, அங்கிருந்த சிலர் பெண்களை கேலி செய்துள்ளனர். இத னால் கோபமடைந்த பெண் தொழிலாளர்கள் மதுக்க டையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். உடனடியாக மது க்கடை கதவு இழுத்து மூடப்பட்டது. பெண்கள் பொங்கி எழுந்ததால் குடிமக ன்கள் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பெண்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பெண்கள் உறுதியாக நின்றனர். இதையடுத்து அதிகாரிகள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து 5 தினங்களில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.தமிழகம் முழுவதுமே மதுக்கடைகளை அப்புறப்ப டுத்த வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராடி வரும் நிலையில், தன்னெழுச்சியாக பெ ண்களும், சிறுவர்களும் கடை களை மூடச் சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நன்றி : தீக்கதிர்