தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சியினால் பாதிக்கப்பட்டு, பல லட்சம்ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட முடியாத நிலையில், விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தி மனிதாபிமானம் சிறிதுமின்றி வங்கிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாக தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 400 விவசாயிகள் உயிர் இழந்திருக்கிறார்கள்.விவசாயப் பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலம் சூனியமான நிலையில், விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக் கேற்ப உடனடியாக அமைத்திட மத்தியஅரசை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் இடைவிடாத போராட்டங் களில் ஈடுபட்டுள்ளனர். தில்லியிலும்தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும்மேலாக போராடியும், பிரதமரை சந்திக்கக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழக விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் முன்வராத காரணத்தாலும், போராடும் விவசாயிகளின் வேதனையான நிலைமையினைப் பொருட்படுத்தாத காரணத்தினாலும் தி.மு.க. - இந்திய தேசிய காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - விடுதலை சிறுத்தைகள் கட்சி - மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏப்ரல்-25 அன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்துகின்றன.இந்த மாபெரும் போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்அமைப்புகள் பேராதரவு தெரிவித்துள் ளன. எனவே, ஒட்டுமொத்த தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையும் செவ்வாயன்று ஸ்தம்பிக்கிறது.
பேராவூரணியில் இன்று முழு அடைப்பு.
ஏப்ரல் 25, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க