பேராவூரணி அடுத்து தெற்கு ஒட்டங்காடு கருப்பையா உடையார் உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கவிமணி (32). இவரின் தாயார் கண்ணகி (50), இவரின் சகோதரி கஸ்தூரி (24) இவர்கள் மூவரும் தங்களின் வீட்டில் குடியிருந்து வந்தனர். கஸ்தூரிக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. அவரின் திருமண செலவிற்காக ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் வங்கியிலிருந்து எடுத்து வந்து பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தின இரவு சுமார் 10:30 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு நபர்களும், சாதாரணமாக இரண்டு நபர்கள் என நான்கு திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து உள்பக்கமாக கதவை தாளிட்டுள்ளனர்.வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த கண்ணகி, டிவி பார்த்துக் கொண்டிருந்த கவிமணி இருவரையும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியுள்ளனர். மாடியில் இருந்த கஸ்தூரி சப்த்தம் கேட்டு கீழே இறங்கியுள்ளார். அவர் கழுத்திலும் கத்தி வைத்து மூவரையும் ஒரே அறையில் வைத்து அடித்து பீரோ சாவியை கேட்டுள்ளனர்.
சாவி அவர்களிடம் இல்லாததை அறிந்து திருடர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மூவரையும் துப்பாக்கி முனையில் வைத்து கண்ணகி, கஸ்தூரி இருவரும் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, செல்போன்களையும் எடுத்துக் கொண்டுவிட்டை இரவு சுமார் 11:30 மணிக்கெல்லாம் வெளியில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
செய்தி அறிந்து தஞ்சையிலிருந்து நேற்று காலை 10.00 மணியளவில் ராஜராஜன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 500 மீட்டர் தூரம் ரயில்வே பாதையை கடந்து காலை 10.15 மணிக்கு தனியார் தென்னை தோப்பில் ஓடி நின்றது.
இது குறித்து பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்மேனன், திருச்சிற்றம்பலம் காவல்ஆய்வாளர் செந்தில்குமரன், பட்டுக்கோட்டை காவல்ஆய்வாளர் சிங்காரவேலன், மதுக்கூர் காவல் ஆய்வாளர் தியாகராஜன், மற்றும் தனிபிரிவு காவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
தடவியல்துறை அதிகாரி கலைகண்ணகி ஆய்வுகள் செய்து வருகிறார். இச்சம்பவம் இப்பகுதியில் பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வீட்டில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த கண்ணகி, டிவி பார்த்துக் கொண்டிருந்த கவிமணி இருவரையும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியுள்ளனர். மாடியில் இருந்த கஸ்தூரி சப்த்தம் கேட்டு கீழே இறங்கியுள்ளார். அவர் கழுத்திலும் கத்தி வைத்து மூவரையும் ஒரே அறையில் வைத்து அடித்து பீரோ சாவியை கேட்டுள்ளனர்.சாவி அவர்களிடம் இல்லாததை அறிந்து திருடர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மூவரையும் துப்பாக்கி முனையில் வைத்து கண்ணகி, கஸ்தூரி இருவரும் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, செல்போன்களையும் எடுத்துக் கொண்டுவிட்டை இரவு சுமார் 11:30 மணிக்கெல்லாம் வெளியில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.செய்தி அறிந்து தஞ்சையிலிருந்து நேற்று காலை 10.00 மணியளவில் ராஜராஜன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 500 மீட்டர் தூரம் ரயில்வே பாதையை கடந்து காலை 10.15 மணிக்கு தனியார் தென்னை தோப்பில் ஓடி நின்றது.இது குறித்து பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்மேனன், திருச்சிற்றம்பலம் காவல்ஆய்வாளர் செந்தில்குமரன், பட்டுக்கோட்டை காவல்ஆய்வாளர் சிங்காரவேலன், மதுக்கூர் காவல் ஆய்வாளர் தியாகராஜன், மற்றும் தனிபிரிவு காவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.தடவியல்துறை அதிகாரி கலைகண்ணகி ஆய்வுகள் செய்து வருகிறார். இச்சம்பவம் இப்பகுதியில் பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.