பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் சி. ராணி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் துறை உதவிப் பேராசிரியர் அ. செல்வராஜ் இலக்கிய சொற்பொழிவாற்றினார். விழாவையொட்டி மாணவ, மாணவியருக்கு பல்வேறு இலக்கிய திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேராசிரியர்கள் நா. பழனிவேல், ஆர். ராஜ்மோகன், அ. மும்தாஜ்பேகம், ந.மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் துறை தலைவர் ஜே. உமா வரவேற்றார்.
நன்றி : தினமணி