பேராவூரணி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை வகித்தார். சித்ரா வரவேற்றார். செங்கமங்கலம் ஆசிரியர் செந்தில், ஆணைக்காடு ஆசிரியர் மாஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் செங்கமங்கலம், பேராவூரணி கிழக்கு, மதன்பட்டவர், ஏனாதி, கரம்பை, காலகம், வீரராகவபுரம், சித்துகாடு உள்ளிட்ட 41 பள்ளிகளின் மாணவ, மாணவியர்கள் பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.
போட்டிகளுக்கு நடுவர்களாக காலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெரியசாமி, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகிழக்கு ஆசிரியர் சுபாஷ் ஆகியோர் பணியாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காலகம் புகழேந்தி, ஊமத்தநாடு கல்யாணசுந்தரம், சுதா, செந்தில்குமார், வெங்கட்ரமணி, சற்குணவதி, சுகந்தி, ஜென்ஸி, ரேகா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு சிறப்புபரிசுகளை கொன்றைகாடு கணேசன் வழங்கினார். பேராவூரணி கிளைநூலகர் நீலவேணி அனைவருக்கும் நன்றி கூறினார்.