இந்தியாவில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) நோய் ஒழிப்பு பணிக்காக ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெற்று வருகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 அன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பேராவூரணி வட்டாரத்தில் 100 மையங்கள் அமைக்கப்பட்டு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சவுந்தரராஜன் மேற்பார்வையில் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. முன்னதாக வலசக்காடு அரசுப் பள்ளியில் குழந்தை களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சவுந்த ரராஜன் சொட்டு மருந்து வழங்கும் பணியை தொடங்கி வை த்தார். குறிச்சி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவானந்தம் உடனிருந்தார்.பட்டமேற்படிப்பு இட ஒதுக்கீட்டை நீதிமன்ற ஆணை மூலம் குறைக்கப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் இருந்த போதும், போலியோ மருந்து வழங்கும் பணி தடைபடாமல், மருத்துவர்கள் ஒத்துழைப்போடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தீக்கதிர்