ஊர்க்கூடி தேர் இழுப்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கு ஊர்க்கூடி பள்ளியின் ஆண்டுவிழாவை நடத்தியுள்ளனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கட்டையன்காடு உட்கடை அரசுப்பள்ளியின் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழாவை கிராமமே கூடி 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
பள்ளியில் நவீன கணிணி அறை, பேனா தொடு கணிணி, யோகா விரிப்பு, கணிணி அறையில் குளிர்சாதன வசதி என சகல வசதிகளும் ஊரார் நன்கொடையால் செய்யப்பட்டுள்ளது. சிவனாம்புஞ்சை ஊரைச் சார்ந்த கோ.சின்னையா அவர்கள் இப்பள்ளிக்கு அரை ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார்.
"இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்" என்ற பாடல் வரிகளை நெஞ்சில் ஏந்தி அரசுப் பள்ளி வளர்ச்சியில் பங்கெடுத்து வரும் ஒவ்வொருவரையும் நாம் பாராட்டலாம்.
தலைமை ஆசிரியர் ப.மாறன் அவர்களது தலைமையில் இயங்கும் இப்பள்ளி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நன்றி : மெய்ச்சுடர்