தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு முழுமையாக செலு த்தியவ ர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சி யர் ஆ.அண்ணாதுரை தெரி வித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 வட்டங்க ளிலும் சுமார் 724 உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் ஒரு சில ரைத் தவிர, இதர கேபிள் ஆபரேட்டர்கள் மாதாந்திர சந்தா தொகையை அதிகளவில் நிலுவை வைத்துள்ளனர். அதன் படி மாவ ட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு ரூ.5 கோடியே 76 லட்சத்து 99 ஆயிரத்து 320-ஐ நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது. ஆபரேட்டர்கள் சந்தாதார ர்களிமிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அதில் ரூ.20 மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் அரசால் ஆணை யிடப்ப ட்டுள்ளது. ஆனால் பல ஆபரேட்டர்கள் கூடுதலாக தொகையை வசூலித்து வருவதுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்துவதில்லை.அரசுக்கு சந்தா தொகை செலுத்தாமல் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் ஆபரேட்டர்களின் இணைப்புகள் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிலுவையில் உள்ள சந்தா தொகையில் 50 சதவீதத்தை வரும் 30-ம் தேதிக்குள்ளும், மீதமுள்ள தொகையை மே 15-ம் தேதிக்கு ள்ளும் செலுத்த வேண்டும். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு னுஹளு உரிமம் வழங்கி ஆணையிட்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனத்திற்கு னுஹளு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். தமிழக மக்கள் குறைந்த விலையில் உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை இதன்மூலம் பெறுவார்கள். தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறு வனம் டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படி வழங்கும்போது நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி யவர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தீக்கதிர்