ஆதார் அட்டைகளில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை வரும் 17ம் தேதி முதல் நிரந்தர ஆதார் மையங்களில் சென்று திருத்தம் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களில் வரும் 17ம் தேதி முதல் பொதுமக்கள் ஆதார் விபரங்களை திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விபரங்களை திருத்தம் செய்துகொள்ள கட்டணமாக 25 ரூபாயும், அதேபோல் ஆதார் அட்டையை அச்சிட்டு பெறுவதற்கு 10 ரூபாயும் கட்டணமாக பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது