வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராவூரணி ஒன்றியம் செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பாராட்டு தெரிவித்தார்.
செங்கமங்கலத்தில் புதன்கிழமையன்று பள்ளி வளா
கத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், உதவி
தொடக்கக் கல்வி உதவி அலுவலர் கோ.சாமுண் டீஸ்வரி முன்னிலையில் ஒன்றிய அளவில் அறிவியல் கண்காட்சி, ஓவியப் போட்டி, பெரியார் படிப்பகம் மற்றும்
அரசு நூலகம் சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்று கோப்பைகள் வென்ற மாணவர்கள் நீவிதர்சினி, சாந்தினி பிரியா, பிரியதர்சினி, சிவராஜ் மற்றும் வழி
காட்டி ஆசிரியர் ஜே.செந்தில் ஆகியோரை தஞ்சை ஆட்சி
யர் பாராட்டினார்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்