தஞ்சைக்கு தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,331 டன் உரம் வந்தது

Unknown
0
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் வராததால் குறுவை, சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகின. ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டும் நெற்சாகுபடி நடைபெற்றது.இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றை நம்பியே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம்.

உர மூட்டைகள்

இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குரெயிலில் 21 வேகன்களில் 1,012 டன் பொட்டாஷ் உரம், 319 டன் டி.ஏ.பி. உரம் நேற்று தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் உர மூட்டைகளை லாரிகளில் தொழிலாளர்கள் ஏற்றினர். இதையடுத்து இந்த உர மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த உரம் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.
நன்றி:தினத்தந்தி
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top