புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மாநில அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதைக்கண்டித்து, நெடுவாசல் அருகே உள்ள ஆலங்குடியில் 20வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மரத்தின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர். அப்போது இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக 20வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் மரத்தில் ஏறி நூதன போராட்டம் நடத்தினர்.
மே 02, 2017
0 minute read
0
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மாநில அமைச்சர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பின், போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இதற்கிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதைக்கண்டித்து, நெடுவாசல் அருகே உள்ள ஆலங்குடியில் 20வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மரத்தின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர். அப்போது இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க