பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 26-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.
பேராவூரணி வட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை நிரப்பப் பதிவு செய்வதில் சிரமங்கள், எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், அரசு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைத்தல் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்படுத்த இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
எனவே, எரிவாயு இணைப்பு குறித்த தங்களது குறைகளைத் தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் இக்கூட்டத்தில் மனுக்கள் மூலமும், நேரிலும் தெரிவிக்கலாம்.
நன்றி: தினமணி