நோக்கியா 3310.

Unknown
0


இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா போன்களின் விற்பனை நாளை முதல் துவங்குகிறது. முதற்கட்டமாக களமிறங்கும் நோக்கியா 3310 (2017) பதிப்பு நான்கு நிறங்களில் வழங்கப்படுகின்றது. புதிய நோக்கியா 3310 சீரிஸ் 30+ இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 1200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா 3310 குறித்து பலரும் அறிந்திராத சில தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

* நோக்கியா 3310 உலகம் முழுக்க 126 மில்லியன் அதாவது 12.6 கோடி போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. * புதிய நோக்கியா 3310 (2017) முதலில் விற்பனைக்கு வரும் நாடு இந்தியா மட்டுமே. * இந்த போனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஸ்நேக் கேம் விளங்கியது. * ஸ்நேக் கேம் உலகின் அதிகம் விளையாடப்பட்ட கேமாக இருக்கிறது. * புதிய நோக்கியா 3310 (2017) பதிப்பிலும் பழைய ஸ்நேக் கேம் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது. * நோக்கியா 3310 போனின் விளம்பரங்களில் 'indestructible' அதாவது அழிக்க முடியாத என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. * பின்லாந்தின் தேசிய எமோஜிக்களில் ஒன்றாக நோக்கியா 3310 தேர்வு செய்யப்பட்டது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top