தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மே 27 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூல மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான மே 5 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மே 02, 2017
0
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறவுள்ளதையொட்டி அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாட்களுக்கு பதிலாக மே 27 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும், மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி சட்டம் 1881ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூல மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான மே 5 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க