ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். சில நேரங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு கூடுதலாக கோடை விடுமுறை அளிக்கப்படும்.
அதேபோல் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் கூடுதலாகவே இருந்தது. அதனால் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஜூன் 7-ல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்