ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து கோரி பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளிப்பு.
மே 17, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க