சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெருமகளூர் பேரூராட்சி அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முறையீடு, மனு அளித்தல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பழனிவேலு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெருமகளூர் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்திடவேண்டும் . 24 மணி நேரமும் மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பெருமகளூர்-ரெட்டவயல் சாலையை சீரமைத்து, கடைவீதியில் உள்ள மதுக்கடை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்றி : தினகரன்