குண்டும் குழியுமான போக்குவ ரத்திற்கு பயனற்ற வகையில் அமைந்துள்ள ரெட்டவயல்- பெருமகளூர் சாலையை சீரமைக்க வேண்டும். புதிய தரமான சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் சார்பில் மண க்காடு ஊராட்சியை சேர்ந்த வழக்க றிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பி னருமான வீ.கருப்பையா, ரெட்ட வயல் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.கே.கண்ணன் ஆகியோர் பேராவூரணி உட்கோ ட்ட நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளரை நேரில் சந்தித்து சாலைகளை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்ப தாவது: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பூக்கொ ல்லை வழியாக ரெட்டவயல்- பெரும களூர் மார்க்கத்தில் மாநில அரசின் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே எந்த மறுசீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படாததால், சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமாக பள்ளம், படுகுழியாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது.இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.சாலை மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டே ஒப்பந்தம் விடப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுவரை எவ்வித மராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிரு ப்தியில் உள்ளனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக ரெட்டவயல் கடைத்தெரு முழுவதும் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை யினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒழுங்குபடுத்தித்தர வேண்டும். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் மாவ ட்ட ஆட்சியர் தலைமை யில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமிலும் மனு அளிக்க ப்பட்டுள்ளது. சாலையை சீரமை க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கிராம மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மனுவில் தெரிவி க்கப்பட்டு ள்ளது.
நன்றி ; தீக்கதிர்
நன்றி ; தீக்கதிர்