தஞ்சாவூர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண், களி மண், சுவடுமண் விவசாய பயன்பாட்டிற்கு எடுக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் சனிக்கிழமை (20.05.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி குளங்கள் ஆகிய ஒரத்தநாடு வட்டம், தென்னமநாடு ஊராட்சி ஆலத்து ஏரி, ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு குறிச்சி ஏரி, பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி ஊராட்சி, தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் பூங்கல் ஓடை ஏரி, பேராவூரணி வட்டம், ஆவணம் பெரியநாயகிபுரம் ஊராட்சி குளக்குடி ஏரி, வீராக்கோட்டை ஏரி, விளாங்குளம் ஏரி ஆகிய ஏரிகளில் வண்டல், களி மண், சுவடு மண் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கு, மண்பாண்டங்கள் செய்வதற்கு இலவசமாக எடுத்துக் கொள்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் வட்டம், பூதலூர் வட்டம் ஒரத்தநாடு வட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பேராவூரணி வட்டம் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 10.05.2017 முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு விவசாயிகள் உடனடியாக விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசே முன்வந்து ஏரி குளங்களில் வண்டல், களிமண், சுவடு மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இப்பணி செம்மையாக நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தார். பல ஆண்டுகளுக்கு பின் தற்பொழுது தான் இந்த வாய்ப்பை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாய பெருமக்கள் விவசாய பயன்பாட்டிற்கு இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், துவரங்குறிச்சி ஊராட்சியில் தேசிய வேலையுறுதி திட்டத்தின் கீழ் காந்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். பொது மக்களிடம் தேசிய வேலையுறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளம் நிலுiயில்லாமல் கிடைக்கப் பெற்று வருகிறதா என கேட்டறிந்தார். மணியான்கொல்லையில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் திரு. மணியரசன் என்ற பயனாளி வீட்டினை ஆய்வு செய்தார். பின்னர்ää மாவட்ட ஆட்சித தலைவர் அவர்கள் பொது மக்களிடம் குடும்ப அட்டைகளை வாங்கி நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டு அறிந்தார். குடும்ப அட்டைதாரர் பெற்ற 20 கிலோ விலையில் அரிசியின் தரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மணியான்கொல்லையில் சுவிட்ச் பாரத் திட்டத்தின் கீழ் தனி நபர் கழிவறை கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சேதுபாவாசத்திரத்தில் உள்ள மீன் மார்க்கெட் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக தஞ்சாவூர் வட்டம், பள்ளியேறி கிராமத்தில் கால்நடை துறையின் மூலம் நாட்டு பசுக்களுக்கு சினை செறிவூட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 150க்கு மேற்பட்ட நாட்டு பசு மாடுகளுக்கு சினை செறிவூட்டப்பட்டது. மேலும் கருவூற்ற பசுக்களுக்கு தாது உப்பும் இலவசமாக வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, கால்நடைத்துறை இணை இயக்குநர் மாசிலாமணி, பொதுப்பணித்துறை வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ரேவதி, ஊராட்சி உதவி இயக்குநர் திரு.முருகேசன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.