பேராவூரணி அரசு கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்.

Unknown
0

பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்கள் மே 13 சனிக்கிழமையன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) சி.ராணிகூறுகையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் மே 13 சனிக்கிழமை முதல் கல்லூரியில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படஉள்ளது.பி.ஏ.தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல், பிஎஸ்சி கணிதம் உள்ளிட்ட 5 பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 . இருபால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். அரசு விதி முறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவித்தார்.
நன்றி : தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top