பேராவூரணி அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை.

Unknown
0
பிளஸ்-2 தேர்வில் பேராவூரணி பகுதி அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மா.நீலகண்டன் 1083, ஆர்.அரவிந்தன் 1078, எம்.சரவணன் 1071 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 166 பேரில் 152 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 2 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92 ஆகும். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

அரசு பெண்கள் பள்ளி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தமீமா 1128, சண்முகப்பிரியா 1111, அருந்ததி 1077 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 503 பேரில் 500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வணிகவியல் பாடத்தில் 1 மாணவியும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.4 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சி.கஜானா தேவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.குருவிக்கரம்பை அரசு பள்ளிகுருவிக்கரம்பை அரசு மேல்நிலை ப்பள்ளியில் ஆர்.வெற்றிச்செல்வன் 1056, எஸ்.வசந்த் 1012 , என்.நீலகண்டன் 1011 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 96 பேரில் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேளாண் செயல்முறைகள் கருத்தியல் பாடத்தில் ஒரு மாணவர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.
நன்றி : தீக்கதிர்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top