பேராவூரணியை அடுத்த செந்தலைப்பட்டினத்தில், செந்தலைப்பட்டினம் பொதுநலச்சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்தது என்ன ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமையன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி பேராசி ரியர் கே.செய்யது அகமது கபீர் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன், காதிர் முகைதீன் கல்லூரி பி.பி.ஏ., துறைத்தலைவர் கே.நாசர், செந்தலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், பொதுநலச்சங்க தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். செயலாளர் பகுருதீன் நன்றி கூறினார்.
நன்றி : தீக்கதிர்