சேதுபாவாசத்திரத்தில் வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்.

Unknown
0

ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்கள் இனப் பெருக்கக் காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்து வருகிறது. இந்த இந்த ஆண்டும் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 300 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சேதுபாவாசத்திரம் பகுதியில் தடைக்காலத்தையொட்டி படகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வலைகள் மற்றும் உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top