பேராவூரணியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அருகிலேயே சாக்கடை ஓடு வதால்,தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனந்தவள்ளி வாய்க்காலின் குறுக்கே நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக இக்குழாய் உடைந்து தண்ணீர் பீறிட்டு வாய்க்காலிலும், சாலையிலும் வீணாகிறது. இதனருகில் கழிவுநீர் வாய்க்கால் ஓடுவதால், கழிவுநீர் குடிநீர் குழாயில் கலந்து தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது கோடைகாலமாக இருப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள சூழலில் குடிநீர் வீணாவதும், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
நனறி : தீக்கதிர்