மே தினத்தையொட்டி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கத்தின் சார்பில், பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. ஆசிரியர் ச.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகமது மாரூப், க.நீலகண்டன், சிவராஜ், இளமதியன், செ.இராகவன்துரை, செ.இராமநாதன், பாக்கி உமாநாத், வீர.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வீர.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
நன்றி : தீக்கதிர்