பேராவூரணியில் இயங்கி வந்த 4 டாஸ்மாக் மதுபானக்கடைகள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் மூடப்பட்டது.இந்நிலையில் பேராவூரணி பேரூராட்சி க்குட்பட்ட பழைய பேராவூரணியில், ஆத னூர் செல்லும் சாலையில் கூப்புளிக்காடு என்ற இடத்தின் அருகில் புதிதாக மதுக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை அமைக்கும் இடத்தில் ஒன்று திரண்டனர். இப்பகுதியில் பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் இரு ப்பதால் மதுக்கடை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அங்கிருந்து 300 மீட்டர் தொலை வில் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேராவூ ரணி காவல்நிலையம் அருகில் ஒன்று திரண்டு மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். தொடர் முழக்கங்களையும் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பேராவூரணி சமூக நலப் பாதுகாப்பு தனி வட்டாட்சியர் கோபி, காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் தனிப்படை ஏட்டு பெத்தபெருமாள் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கோரிக்கையை மனுவாக எழுதி கேட்டனர். பின்னர் மனுவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் மதுக்கடைகள் அமைக்க ஒப்புதல் வழங்க மாட்டோம் என உறுதி அளித்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் மதுக்கடைக்கு கட்டிடத்தை வாடகைக்கு தருவதாக ஒப்புதல் அளித்த கட்டிட உரிமையாளர் செல்வராணி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மதுக்கடைக்கு இடம் தரமாட்டேன் என ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தீக்கதிர்