பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் 48 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையை டிஆர்ஓ சக்திவேல் வழங்கினார். பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியையொட்டி கோரிக்கை மனு அளித்தவர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டி.ஆர்.ஓ சக்திவேல் தலைமை வகித்து 48 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையையும் 4 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் ரகுராமன் துணை தாசில்தார் தெய்வானை, டி.எஸ்.ஓ சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன்
நன்றி : தினகரன்