ஆழ்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க மாட்டார்கள். இந்த காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் பழுது நீக்குவது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம், காரங்குடா, சம்பைப்பட்டினம், மந்திரிபட்டினம், குப்பத்தேவன், கணேசபுரம் உள்பட 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
கடலுக்கு சென்றனர்
இதில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய மீனவ கிராமங்களில் சுமார் 301 விசைப்படகுகள் உள்ளன. பிற கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் உள்ளன. இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று நள்ளிரவு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வசதியாக கரை திரும்ப வேண்டும். இந்த நிபந்தனையுடன் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.