பேராவூரணி கடைவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகல் நேற்று ஆய்வு செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமையில் டாக்டர் அறிவானந்தம், சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் அமுதவாணன் உள்ளிட்டோர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை மொத்த விற்பனை கடைகளில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து, விற்பனை செய்தவர்களுக்கு உடனடி அவதாரம் விதித்தனர்.கடைகளுக்கு வெளியே சிகரெட் பற்றவைக்க, உபயோகப்படுத்தப்படும் லைட்டர், திரி, கயிறு போன்ற பொருட்களை வைக்கக்கூடாது, 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட மாட்டாதென அறிவிப்பு பலகை வைக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
நன்றி:தினகரன்
நன்றி:தினகரன்