பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில்வட்டாரச் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முகாமையொட்டிப் புனல்வாசல் கிராமத்தில் கொசுப்புழு ஒழிப்புபணி, புகை மருந்து அடித்தல், மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர் வழங்கல், குளோரினேசன் செய்யப்பட்டகுடிநீர் வழங்கல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் பணி நடைபெற்றது.முன்னதாகப் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்