நடப்பாண்டில் மேட்டூர் அணையி லிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலை இருந்து வருவதால் குறுவை சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் மற்றும் நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நெல்பயிருக்கு மாற்றாக பயறுவகை சாகுபடியை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் 2017-னை அறிவித்துள்ளது.இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சு.இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறி ப்பில் கூறியிருப்பதாவது:
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் தற்போதுள்ள நீர் ஆதாரங்களை பயன்படுத்தி நெல் மற்றும் பயறுவகை சாகுபடி மேற்கொள்ளல், உழவு மேற்கொள்வதற்கான உதவி த்தொகை, நீர்ப்பாசன குழாய்கள் மானிய த்துடன் வழங்குவது, இயந்திர நடவு முறையை ஊக்குவித்தும், நெல் மற்றும் பயறுவகை உற்பத்தியை அதிகரிக்கும் இடுபொ ருட்களுக்கான உதவித்தொகை வழங்குவது மற்றும் வெண்ணாறு பகுதிக்கான பசுந்தாள் உரப்பயிர் விதை விநியோகம் போன்ற வற்றிக்கான மானிய விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் ஆணைக்கிணங்க இயந்திர நெல் நடவிற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் , சிங்க்சல்பேட் உபயோகத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.400, திரவ உயிர் உரங்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.120-, நெல் நுண்ணூட்டத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.200 மானியமாக வழங்கப்படவுள்ளது. தரிசு உழவு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றிற்கு ரூ.500 மானியம் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கிட பரிந்துரை செய்யப்படுகிறது. பயறுவகை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 8 கிலோ சான்று பெற்ற உளுந்து விதை ரூ.960 மானியத்தில் வழங்கப்படும்.
திரவ உயிர் உரத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.120-ம், டிஏபி இலைவழித் தெளிப்பிற்கு ரூ.520-ம் வழங்கப்படவுள்ளது.நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்வதற்கு 75 சதவீத மானியத்தில் வெள்ளை பிவிசி பைப்புகள் மானியத்தில் வழங்கப்படவுள்ளது.எனவே நெல் மற்றும் பயறுவகை சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெறுவதற்கு தங்களது பெயர்களை அந்தந்த தொகுதி வேளா ண்மை விரிவாக்க அலுவலர்களிடம் தெரிவித்து முன்பதிவு செய்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி : தீக்கதிர்