பேராவூரணி அருகேயுள்ள மல்லிபட்டிணத்தில் துறைமுக பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் விசைபடகு மீனவர்களின் சுமார் 10 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் மல்லிபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்திட கடந்த 2015ம் ஆண்டு துறைமுகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. துறைமுகம் விரிவுப்படுத்திட அரசு தற்போது 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப் பணிகளை தொடங்க நேற்று காலை மல்லிபட்டிணம் விசைபடகு மீன்பிடி துறைமுகத்தில் நாகப்பட்டினம் மீன்துறை இணை இயக்குனர் அமல்சேகர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் மல்லிபட்டிணம் மீன்துறை ஆய்வாளர் மோகன்தாஸ், ஒப்பந்தகாரர்கள் முருகேசன், பிரவிஸ்கிருஷ்ணா, விஜயராசன், தமிழ்நாடு விசைபடகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன், மீனவசங்க பிரதிநிதி வெங்கடாசலம் உட்பட ஏராளமான மீனவசங்க பிரதிநிதிகளும் மீனவர்களும் கலந்து கொண்டனர்.
நன்றி : தினகரன்