பேராவூரணியில் நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் நீலகண்டபுரம் செல்லும்சாலையில் சின்னத்தம்பி தெருவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ரயில்வே கேட்டை ( எல்.சி. நம்பர் 121) தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் அகலரயில்பாதை பணிகளுக்காக நிரந்தரமாக மூட ரயில்வேநிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.இதனால் தங்கள் வீடுகளுக்கு செல்ல மாற்றுப் பாதை இல்லாமல் அவதிப்பட நேரிடும், எனவே பாதையை மூடக்கூடாது எனக்கூறி,இப்பாதையை பயன்படுத்தும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இத்திட்டத்தை எதிர்த்து ரயில்வே கேட் உபயோகிப்பாளர் குழு அமைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்றுசனிக்கிழமை அன்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் ரயில்வே கேட் பகுதியைபார்வையிட்டார். பின்னர் இப்பகுதி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். இப்பிரச் சனை குறித்து இரயில்வே அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், பாராளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தீக்கதிர்