தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:தஞ்சாவூர் ஒன்றியம் நீலகிரி, மேலவெளி, திருவையாறு ஒன்றியம் வைத்தியநாதன்பேட்டை, கீழத்திருப்பூந்துருத்தி, பூதலூர் ஒன்றியம் புதுக்குடி, வெண்டையம்பட்டி, ஒரத்தநாடு ஒன்றியம் கருக்காடிப்பட்டி, புலவன்காடு, திருவோணம் ஒன்றியம் பாதிரக்கோட்டை வடக்கு, நெம்மேலிதிப்பியக்குடி, கும்பகோணம் ஒன்றியம் திருப்புறம்பியம், சேங்கனூர், திருவிடைமருதூர் ஒன்றியம் எஸ். புதூர், கொத்தங்குடி, திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர், பாபநாசம் ஒன்றியம் ரெகுநாதபுரம், பசுபதிகோவில், அம்மாப்பேட்டை ஒன்றியம் செருமாக்கநல்லூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் பண்ணவயல், மதுக்கூர் ஒன்றியம் அத்திவெட்டி, சிரமேல்குடி, பேராவூரணி ஒன்றியம் காலகம், புனவாசல் ஆகிய ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்புப்படி சமூகத் தணிக்கை மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக் குழுவினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் ஆக. 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம்.
ஜூலை 26, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க