பேராவூரணி அருகே உள்ள பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட உள்ளது.பேராவூரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சமுதாய கூடம் அமைப்பதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமையன்று சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா சாணாகரையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில கயறு வாரிய தலைவர் நாடாகாடு நீலகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் உ.துரைமாணிக்கம், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், வி.பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் கங்கா செல்வம், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சாந்தி அசோக்குமார், ஒப்பந்ததாரர் ஞானம், கணேஷ் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அடுத்த பைங்கால் ஊராட்சி சாணாகரையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம்.
ஜூலை 29, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க