நோக்கியா 8 வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்.
ஜூலை 17, 2017
0
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எச்.எம்.டி. குளோபல் நோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனினை வெளியிட தயாராகி வருகிறது. நோக்கியா 8 அல்லது நோக்கியா 9 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஜெர்மன் இணையதளத்தில் TA-1004 மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 8 அல்லது நோக்கியா 9 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகான் 835 சிப்செட் அல்லது குவால்காம் நிறுவனத்தின் புதிய சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் என்றும் ஒற்றை சிம் ஸ்லாட் கொண்ட மாடலும் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. புலூ, ஸ்டீல், கோல்டு / புலூ, மற்றும் கோல்டு / காப்பர் நிறங்களில் நோக்கியா 8 வெளியிடப்படும் என கூறப்படுகிறது. புதிய நோத்தியா 8 ஸ்மார்ட்போன் ஜூலை 31-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை €589 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,415 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் சில சந்தைகளில் இதன் விலை சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் முழு சிறப்பம்சங்கள் சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வழங்கப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே, 13 எம்பி டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் கேமராவிற்கென செய்ஸ் நிறுவனத்துடன் பிரத்தியேக ஒரப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க